RSS
Showing posts with label முதல்வரின் விருது. Show all posts
Showing posts with label முதல்வரின் விருது. Show all posts

முதல்வரின் விருது


இயக்குநர் இமையம் திரு பாரதிராஜா அவர்களின் தெக்கித்திபொண்ணு நெடுந்தொடரில் நடித்த கலைஞர்களுக்கு விருது வழங்கும்விழா மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைமையில் மே 16 , 2010 அன்று சென்னை லீ ராயல் மெரிடியன் ஒட்டலில் நடைபெற்றது..அத்தொடரில் நடித்தமைக்காக நானும் விருதுக்குரியவனாகும் தகுதி பெற்றேன்...

தாயின் அருள்,
தந்தை எனக்களித்த சுதந்திரம்,
உடுக்கையிழந்தவனின் கைகளை விடவும்
உயர்ந்து நின்று இடுக்கன் களையும்
எனது புனித நட்பு,
இவைகள்தான் என்னை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க செய்கிறது,
நம்பிக்கையின் நிமித்தம் பயணிக்க செய்கிறது..
உயரமான சிகரங்களுக்கே
வைகறை ஒளியின் முதல் முத்தம் கிடைக்குமாம்,
அந்த முத்தத்திற்காக உயர முயற்சிக்கிறேன்
உங்களின் வாழ்த்துக்களோடு..
கலைத்துறையில் என்னை அறிமுகப்படுத்திய
இயக்குநர் இமையம் திரு பரதிராஜா அவ்ர்களுக்கும்,
முதல் தொடரிலேயே நினைவுபரிசு வழங்கி கவுரவித்த
மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அய்யா அவர்கட்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! உங்கள் வாழ்த்துகள் தொடரட்டும்..நன்றி.!

Read comments